எஸ்.எஸ்.எஸ். கல்லூரியில் பொங்கல் விழா


எஸ்.எஸ்.எஸ். கல்லூரியில் பொங்கல் விழா
x

ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை

ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி நிறுவனத் தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஏ.என்.சரவணன், ஏ.என்.செல்வம், ஏ.என்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி வரவேற்று பேசினார். கல்லூரி நிறுவனத் தலைவர் ஏ.கே.நடராஜன் பேசுகையில் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அனைத்துத் துறைகளிலும் முதன்மையானவர்களாக வர வேண்டும் என்றார். பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள் கட்டி வண்ணக் கோலங்கள் வரையப்பட்டிருந்தது. மேலும் புதுப் பானையில் பொங்கல் வைத்து செங்கரும்பு, மஞ்சள், வாழை, வெற்றிலை பாக்கு, இனிப்பு வகைகள் வைத்து படையல் இட்டனர். இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் வணிக நிர்வாகவியல் துறை தலைவர் கே.வி.சிவக்குமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கவிதா, தமிழ் தென்றல், லட்சுமி, சுமிதா, சுமித்ரா, தேவி, சந்தியா ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story