கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கு


கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில்  தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கு
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கு நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி எஸ். எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி அனைத்து துறை 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி செயலாளர் எஸ். கண்ணன் தலைமை தாங்கினார். மாணவி எஸ். அருணா தேவி வரவேற்று பேசினார். கம்பன் கழகச் செயலாளர் சரவணன் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினரை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஆர். செல்வராஜ் அறிமுகம் செய்து வைத்தார். கருத்தரங்கில் கூகுள் இந்தியா நிறுவன பொறியாளர் டி. முத்து கண்ணன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு, தொழிற் துறையில் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல் பற்றி பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வ லட்சுமி, விஜய கோபாலன், ஆங்கிலத்துறை தலைவர் பிரேமலதா ஆகியோர் செய்திருந்தனர். மாணவி யாசின் பாத்திமா நன்றி கூறினார்.


Next Story