புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா


புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா
x

மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனூர் கிராமத்தில் நூற்றாண்டு விழா கண்ட பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழா நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து, இந்தாண்டு ஆலயத்தில் ஆண்டு பெருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி புனித அந்தோணியார் ஆலயத்தில் 116-ம் ஆண்டு பெருவிழாவுக்கான கொடியேற்று விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் ஆலயத்தில் திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து புனித அந்தோணியார் உருவம் பொறித்த கொடி பவனியாக கொண்டு வரப்பட்டது.

தேர்பவனி

இதையடுத்து இரவு 7 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 70 அடி உயர கம்பத்தில், தஞ்சை மறைமாவட்ட முதன்மை குரு ஞானப்பிரகாசம் கொடி ஏற்றி பெரு விழாவை தொடங்கி வைத்தார். இதில் உதவி பங்குத்தந்தை அலெக்ஸ் ஒளில்குமார், புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தேவதாஸ், மறைமாவட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், காரியக்காரர்கள், பங்கு மக்கள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பெருவிழாவையொட்டி தினந்தோறும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெறும். மேலும் விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 12-ந்தேதி பொருத்தனை தேர்பவனியும், 13-ந் தேதி பெருவிழா தேர்பவனியும் நடைபெற உள்ளது.


Related Tags :
Next Story