புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி


புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி
x

இலுப்பூரில் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

அந்தோணியார் ஆலயம்

இலுப்பூரில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு பங்குத்தந்தைகள் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதனைதொடர்ந்து நள்ளிரவில் வண்ண மலர் தோரணங்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முதலாவது தேரில் மெக்கேல் சம்மனசும், இரண்டாவதாக ஆரோக்கிய மாதா சொரூபம் தாங்கிய தேரும், மூன்றாவதாக புனித பதுவை அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேரும் என 3 தேர்களும் ஊரின் முக்கிய பகுதிகளின் வழியாக பவனி வந்தன.

தேர் பவனி

அப்போது வீதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீடு அருகே தேர் வலம் வரும் பொழுது மெழுகுவர்த்தி, மாலை, சாம்பிராணி ஆகியவற்றை காண்பித்து புனித அந்தோணியாரை பிரார்த்தித்தனர். இந்த தேர் பவனி வேளையில் விண்ணில் கண்கவர் வாணவேடிக்கை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருப்பலியும், இரவு 7 மணி அளவில் நற்கருணை ஆசீர்வாதம், அதனைத் தொடர்ந்து புனித அந்தோணியாரின் திருக்கொடி இறக்கமும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.


Next Story