புனித அந்தோணியார் ஆலய திருவிழா சப்பர பவனி


புனித அந்தோணியார் ஆலய திருவிழா சப்பர பவனி
x
தினத்தந்தி 23 May 2023 6:45 PM GMT (Updated: 23 May 2023 6:46 PM GMT)

திருவழுதிநாடார்விளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா சப்பர பவனி நடந்தது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் புனித சூசையப்பர் ஆலயத்தின் கிளை பங்கான ஏரல் அடுத்துள்ள திருவழுதிநாடார்விளை புனித கரிந்த கை அந்தோணியாரின் ஆலயத்தின் 101-வது திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. முக்கிய திருவிழா அன்று திருப்பலி நடந்தது. அன்று மாலை நடந்த ஆராதனையை ஆயர் இல்ல ரஞ்சித்குமார் கர்டோசா தலைமை தாங்கி நடத்தினார். திருப்பலிக்கு பணகுடி ரோஸ்மில்லாபுரம் இசிதோர் தலைமை தாங்கி செய்தி வழங்கினார்.

விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக அன்று இரவு ஏரல் சூசையப்பர் ஆலய வளாகத்தில் இருந்து சப்பரபவனி தொடங்கி ஏரல் பஜார் வழியாக வந்து திருவழுதிநாடார்விளை புனித கரிந்த கை அந்தோணியார் ஆலயத்திற்கு வந்தடைந்தது. இதில் சப்பரம் வரும் வழியில் இறை மக்கள், ஊர் பொதுமக்கள் திரண்டு சப்பரத்துக்கு வரவேற்பு கொடுத்து உப்பு, மிளகு மற்றும் மெழுகுவர்த்தி கொடுத்து தரிசனம் செய்தனர். மறுநாள் கோவில் வளாகத்தில் அசன விருந்து நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருவழுதிநாடார்விளை அந்தோணியார் ஆலயம் நிர்வாகத்தினர் மற்றும் பங்குத்தந்தை ரவீந்திரன் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.


Next Story