எஸ்.டி. சாதிச்சான்று வழங்கக்கோரி குருமன்ஸ் பழங்குடியினர் உள்ளிருப்பு போராட்டம்


எஸ்.டி. சாதிச்சான்று வழங்கக்கோரி குருமன்ஸ் பழங்குடியினர் உள்ளிருப்பு போராட்டம்
x

திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் எஸ்.டி. சாதிச்சான்று வழங்கக்கோரி குருமன்ஸ் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்பட பலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் எஸ்.டி. சாதிச்சான்று வழங்கக்கோரி குருமன்ஸ் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்பட பலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எஸ்.டி. சாதிச்சான்று

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, செங்கம் ஆகிய தாலுகாக்களில் அதிகளவில் குருமன்ஸ் பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தங்களுக்கு எஸ்.டி. சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி முதல்-அமைச்சர், கலெக்டர், உதவி கலெக்டர், தாசில்தார் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்து தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் குருமன்ஸ் கலாசார ஆய்வறிக்கையின்படி குருமன்ஸ் பழங்குடியின எஸ்.டி. சாதிச்சான்று வழங்கக்கோரி குருமனஸ் பழங்குடியின மக்கள், மாணவர்கள் உள்ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு குருமன்ஸ் பழங்குடியினர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சஞ்சீவி பழனி, குருமன்ஸ் மடத்தின் தலைவர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மனோகரன் வரவேற்றார்.

போராட்டத்தில் தண்டராம்பட்டு, செங்கம் தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் கோரிக்கைகள் வலியுறுத்திய பதாகைகளுடன் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதனைத்தொடர்ந்து உதவி கலெக்டர் வெற்றிவேல் தலைமையிலான அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட குருமன்ஸ் பழங்குடியின மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றனர்.

அப்போது குருமன்ஸ் பழங்குடியினர் தங்களது கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்களது வாழ்க்கை முறைகளை அதிகாரிகளுக்கு செயல்விளக்கம் செய்து காட்டினர்.

அந்த சமயத்தில் அவர்கள் கலாசார முறைப்படி நடனமாடி தலையில் தேங்காய் உடைத்தனர். இ

தையடுத்து உதவி கலெக்டர் வெற்றிவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், தாசில்தார்கள் முனுசாமி, பரிமளா ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களுக்கு குருமன்ஸ் பழங்குடியினர் எஸ்.டி. சாதிச்சான்றிதழ் வழங்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் என தெரிவித்தனர்.

தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் சான்றிதழ் வழங்குவது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இருப்பினும் சாதிச்சான்றிதழ் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். தொடர்ந்து குருமன்ஸ் பழங்குடியின மக்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story