புனித லசால் பள்ளி மாணவர்கள் வெற்றி
வட்டார விளையாட்டு போட்டியில் தூத்துக்குடி புனித லசால் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தூத்துக்குடி வட்டார அளவிலான குழு விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் தூத்துக்குடி துறைமுக பள்ளியில் நடந்தது. இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில் முதல் இடத்தையும், 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் 2-வது இடமும், 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டியில் 2-வது இடமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான இறகுபந்து போட்டியில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்தனர்.
இதேபோன்று தடகள போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் 600 மீட்டர் ஓட்டப் போட்டியில் மாணவன் நவீன்குமார் முதலிடமும், 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் மாணவன் கனகவேல் முதலிடமும் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் மாணவன் சரண்ராஜ் முதலிடமும், கதிர்வேல் மூன்றாமிடமும் பெற்றனர். 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் மாணவன் சரண்ராஜ் முதலிடம், மாணவன் எட்வர்ட்சன் மூன்றாமிடம் பெற்றனர். 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் மாணவன் ஜென்மதி ஜெயராம் இரண்டாமிடமும், மாணவன் கருப்பசாமி மூன்றாமிடமும் பெற்றனர். 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் மாணவன் ஸ்ராக்வின் முதலிடம் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ஆரோக்கியதாஸ், தலைமை ஆசிரியர் ஜான்பால், பள்ளி விளையாட்டு கழக உறுப்பினர் ஜான் பீட்டர், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஜெயக்குமார், தர்மர் மற்றும் அருட்சகோதரர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
---