புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்


புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
x

விக்கிரமசிங்கபுரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் இருதயகுளம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், மதுரை திருநகர் பங்குத்தந்தை ராஜன் ஆகியோர் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்குத்தந்தைகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்பட இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நேற்று தொடங்கிய திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. 4-ந் தேதி (சனிக்கிழமை) மாலை ஒளிப்பயணம், 8-ந்தேதி கலைநிகழ்ச்சி, 9-ந்தேதி இளைஞர்கள் கலை விழா நடக்கிறது. 10-ந்தேதி விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து அன்னை மரியாளின் தேர் பவனி தொடங்கி ஆலயம் வரை நடைபெறும். தொடர்ந்து 11-ந்தேதி திருஇருதய பள்ளியில் இருந்து நற்கருணை பவனி நடக்கிறது.

10-ம் திருவிழா அன்று அதிகாலையில் திருப்பலியும், மாலையில் நன்றி திருப்பலியும், கொடி இறக்கமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், அமலவை அருள்சகோதரிகள், திருஇருதய அவை அருள்சகோதரர்கள், பங்கு மீட்பு பணிக்குழு, பங்கு பணியாளர் ஆகியோர் செய்து உள்ளனர்.


Next Story