புனித மரியன்னை ஆலய விழா கொடியேற்றம்


புனித மரியன்னை ஆலய விழா கொடியேற்றம்
x

புனித மரியன்னை ஆலய விழா கொடியேற்றம்

மதுரை


மதுரை கீழவாசல் தூய மரியன்னை ஆலயத்தில் புனித வியாகுல அன்னையின் 180-ம் ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. விழாவின் முதலாம் நாளான நேற்று மாலை 6.30 மணிக்கு முதன்மை குரு ஜெரோம் எரோணிமுஸ் அன்னையின்‌ உருவக்‌ கொடியை அர்ச்சித்து, ஏற்றிவைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர் கூட்டுத்திருப்பலி நடந்தது. 10-ம் தேதி முதல்‌ 17-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும்‌ மாலை 6.00 மணிக்கு திருப்பலி நடைபெறும்‌. நகரில்‌ உள்ள அனைத்து‌ பங்குகளிலிருந்தும்‌ இறைமக்கள்‌ கூடி திருப்பலியில்‌ பங்குபெறுவர்‌. அதேபோல் ஒவ்வொரு நாளும்‌ ஒவ்வொரு தலைப்புகளில் சிறப்பு திருப்பலி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அன்னையின் தேர்பவனி 17-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும். 18-ம் தேதி காலை திருவிழா நிறைவு மற்றும் நற்கருணை ஆசீர் புனித மரியன்னை பேராலய அதிபர் பங்குத்தந்தை மரியநாதன் தலைமையில் கொடி இறக்கம் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள் மரியநாதன் விஜின், ஜோசப் ஆகியோர் செய்துள்ளனர்.


Next Story