புனித பதுவை அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
புனித பதுவை அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுக்கோட்டை
அன்னவாசல்:
இலுப்பூர் புனித பதுவை அந்தோணியார் ஆலயத்தில் தேர் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடந்தது. திருக்கொடி மந்திரிக்கப்பட்டு ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு திருக்கொடி பவனி வந்தடைந்தது. பின்னர் திருக்கொடியை கீரனூர் மறைவட்ட அதிபர் அருளானந்தம் அடிகளார் மந்திரித்து ஏற்றினார். பாடல் இசைக்கப்பட்டு, தப்பாட்டம் முழங்க, வாண வேடிக்கையுடன் திருக்கொடி கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் திருப்பலியை அருளானந்தம் அடிகளார் இணைந்து அருட்பணி பவுல் கிரிஸ்டோபர், அருட்பணி வினோத் மற்றும் பங்குத்தந்தை ஆரோக்கிய ராஜ் ஆகியோரின் கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வருகின்ற 12-ந்தேதி நடக்கிறது.
Related Tags :
Next Story