கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய திருவிழா கொடியேற்றம்


கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய திருவிழா கொடியேற்றம்
x

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது.

கொடியேற்றம்

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 99-வது ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று மாலையில் மேள வாத்தியங்கள் முழங்க கொடி பவனியாக எடுத்து வரப்பட் டது. தொடர்ந்து ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடந்தது. நிகழ்ச்சியில் குழித்துறை மறைமாவட்ட முதன்மைச் செயலாளர் அருட்பணியாளர் டாக்டர் ப. ரசல்ராஜ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார்.

தொடர்ந்து அன்பின் விருந்து, பொதுக்கூட்டம் நடந்தது. முன்னதாக காலையில் முன்னோர் நினைவு திருப்பலி, கல்லறைத் தோட்டம் மந்திரிப்பு, ஜெபமாலை, குணமளிக்கும் திருப்பலி ஆகியவையும் நடந்தது. விழாவில் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குப்பேரவை மற்றும் புனித அன்னை தெரேசா நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். விழா தொடர்ந்து வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது.


Next Story