ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்
அருப்புக்கோட்டை அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் இருந்து பாலவனத்தம் செல்லும் பாதையில் உள்ள ெரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் கோபாலபுரத்தில் இருந்து பாலவநத்தம் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் விருதுநகர் உள்ளிட்ட ஊர்களுக்கு வாகனங்களில் செல்வோர் பல கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிைல நிலவுகிறது. மேலும் இப்பகுதியை சுற்றி ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
அந்த விவசாயிகளும் தங்களது விளைநிலத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், மழைக்காலங்களில் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதால் அந்த வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.