ரெயில்வே கீழ் பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்


ரெயில்வே கீழ் பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
x

சாத்தூரில் ரெயில்வே கீழ் பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூரில் இருந்து இருக்கன்குடி, நென்மேனி, எம்.நாகலாபுரம், மாயூர்நாதபுரம் நெ.மேட்டுப்பட்டி, நத்தத்துப்பட்டி, சிறுகுளம், சொக்கலிங்காபுரம், கோட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் மக்கள் ெரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது இரட்டை ரெயில்பாதை அமைக்கப்பட்ட பின்பு தினமும் இந்த வழியாக 30-க்கும் மேற்பட்ட ெரயில்கள் வந்து செல்கின்றன. இதனால் அடிக்கடி கேட் மூடப்பட்டு பொதுமக்களுக்கு போக்குவரத்தில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் மாற்று பாதையாக சாத்தூர் நகர் சுடுகாட்டு பாதையை தினமும் எண்ணற்ற பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள ரெயில்வே கீழ்பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீரினால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றுவதுடன், மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story