நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா


நின்ற நாராயண பெருமாள் கோவில்  ஆனி பிரம்மோற்சவ விழா
x

திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர்

சிவகாசி,

திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவ விழா

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல் நின்றநாராயண பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி நின்றநாராயண பெருமாளும், செங்கமலத்தாயரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

முன்னதாக கடந்த 5-ந்தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை கொடியேற்றம் நிகழ்ச்சியும், இரவு சூரிய பிரபை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

நாளை முதல் வருகிற 19-ந்தேதி வரை தினமும் தேர்பவனி நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.


Next Story