2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 வகுப்புகள் தொடக்கம்
2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு:
தமிழ்நாடு முழுவதும் 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 வகுப்புகள் நேற்று தொடங்கின. தமிழகத்தில் ஏற்கனவே கடந்த 13-ந் தேதி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் 12-ம் வகுப்பு (பிளஸ்-2) வகுப்புகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதையொட்டி நேற்று பிளஸ்-2 மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர். வகுப்பறையில் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பள்ளிக்கூட வாழ்க்கையில் இறுதி வகுப்பாக பிளஸ்-2 உள்ளது. அதே நேரம் எதிர்கால வேலைவாய்ப்பு, உயர் கல்வி ஆகியவற்றின் நுழைவு வாயிலாகவும் பிளஸ்-2 உள்ளது. எனவே இந்த ஒரு ஆண்டில் மாணவ-மாணவிகள் வேறு சிந்தனைகள் இன்றி படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் அறிவுரை கூறினார்கள்.
Related Tags :
Next Story