விற்பனை மேஜை திட்டம் தொடக்கம்
கடையநல்லூர் அரசு கல்லூரியில் விற்பனை மேஜை திட்டம் தொடங்கப்பட்டது
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கான விற்பனை மேஜை திட்டம் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தக நிறுவனம் தமிழ்நாடு மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலாண்மை நிர்வாகவியல் சார்பில் மாணவர்களுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முரளிதரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இப்ராஹிம் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் மருதமுத்து ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
மாணவ, மாணவிகளை வருங்காலத்தில் தொழில் முனைவோராக உருவாக்கும் பொருட்டு அவர்களுடைய தயாரிப்புகளை தினம்தோறும் வகுப்பு அல்லாத இடைவேளை நேரங்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story