அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்கம்


அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்கம்
x

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக ஸ்மார்ட் வகுப்பறைகளை தொடங்க உதவிடுமாறு கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரியிடம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனைக் ஏற்று கொண்ட எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஸ்மார்ட் போர்டை இரு பள்ளிகளுக்கும் வாங்கி கொடுத்தார். அந்த ஸ்மார்ட் போர்டுகளை பள்ளியில் பொருத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை வாசுகி தலைமையிலும், குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை தனலட்சுமி தலைமையிலும் நடைபெற்றது. தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் கவுரி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக எம்.எல்.ஏ. சிவகாம சுந்தரி கலந்து கொண்டு ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்தார்.

இதில், தான்தோன்றி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரகுநாதன், வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story