நாளை முதல் 8 நாட்களுக்கு நடக்கிறது: டாக்டர் ராமதாஸ் தலைமையில் ``தமிழைத் தேடி'' விழிப்புணர்வு பரப்புரை பயணம்- மதுரையில் ஜி.கே. மணி தகவல்


நாளை முதல் 8 நாட்களுக்கு நடக்கிறது:  டாக்டர் ராமதாஸ் தலைமையில் ``தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணம்- மதுரையில் ஜி.கே. மணி தகவல்
x

நாளை முதல் 8 நாட்களுக்கு டாக்டர் ராமதாஸ் தலைமையில் ``தமிழைத் தேடி'' விழிப்புணர்வு பரப்புரை பயணம் செய்யப்படுகிறது என்று மதுரையில் ஜி.கே. மணி தெரிவித்தார்

மதுரை


மதுரையில் பாட்டாளி மக்கள் கட்சி ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தாய் மொழியான தமிழ் அழிந்து வருகிறது. இதனை காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தமிழ் மொழி ஆட்சி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் "தமிழை தேடி" என்ற விழிப்புணர்வு பரப்புரை பயணம் நாளை (21-ந்தேதி) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்க இருக்கிறது. தொடர்ந்து 8 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் தமிழின் முக்கியத்துவம் குறித்து பரப்புரை செய்யப்படுகிறது. மதுரையில் வருகிற 28-ந்தேதி இந்த பரப்புரை பயண நிறைவு விழா நடக்கிறது. முழுக்க முழுக்க அரசியல் சாயமில்லாத நிகழ்ச்சியாக இருக்கும். தமிழ் மொழி எழுத படிக்க தெரியாமலேயே மாணவர்கள் பட்டம் பெறும் நிலை உள்ளது.

தமிழ் பயிற்று மொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். நீதிமன்றம், திருமணம், கோவில் வழிபாடுகள் என எல்லா இடத்திலும் தமிழ் இருக்கவேண்டும். அரசு, தமிழை கட்டாய பயிற்று மொழியாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா, மாவட்ட செயலாளர் குட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து, ஜி.கே. மணி மற்றும் கட்சியினர் வீதி, வீதியாக சென்று தமிழை தேடி விழிப்புணர்வு பயணத்திற்கான துண்டு பிரசுரத்தை வியாபாரிகள், பொதுமக்களுக்கு வினியோகித்தனர்.


Next Story