ஜமாபந்தி 3-ந் தேதி தொடக்கம்; கலெக்டர் தகவல்
நெல்லை மாவட்டத்தில் ஜமாபந்தி 3-ந் தேதி தொடங்குகிறது என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் அதாவது ஜமாபந்தி வருகிற 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. நெல்லை தாலுகாவுக்கு ஜமாபந்தி அலுவலராக கலெக்டர் விஷ்ணு, ராதாபுரம் தாலுகாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், பாளையங்கோட்டை தாலுகாவுக்கு நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகரன், நாங்குநேரி தாலுகாவுக்கு சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷாப், மானூர் தாலுகாவுக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார், அம்பை தாலுகாவுக்கு சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் குமாரதாஸ், திசையன்விளை தாலுகாவுக்கு ஆய்வுக்குழு அலுவலர் மூர்த்தி, சேரன்மாதேவி தாலுகாவுக்கு வருவாய் நீதிமன்ற உதவி கலெக்டர் தமிழரசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஜமாபந்தியில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை தங்களது கிராமத்துக்கு ஒதுக்கப்பட்ட நாளில் ஜமாபந்தி அலுவலரிடம் கொடுத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.