செண்பக சாஸ்தா அய்யனார் கோவிலில் மாநில புராதன குழு ஆய்வு


செண்பக சாஸ்தா அய்யனார் கோவிலில் மாநில புராதன குழு ஆய்வு
x

செண்பக சாஸ்தா அய்யனார் கோவிலில் மாநில புராதன குழு ஆய்வு செய்தனர்.

புதுக்கோட்டை

அரிமளம் ஒன்றியம், நம்பூரணிபட்டி கிராமத்தில் செண்பக சாஸ்தா அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள், கோவிலின் புராதனம் மற்றும் தொன்மை குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து மனுதாரர்கள் செல்வராஜ் சேர்வை, கருப்பையாசேர்வை ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி செண்பக சாஸ்தா அய்யனார் கோவிலை மாநில அளவிலான புராதன குழு பார்வையிட்டு கருத்துரு வழங்க வந்திருந்தனர். மாநில புராதன குழுவினர் கோவிலை பார்வையிட்டு அதன் புராதனம் குறித்தும், தொன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் மனுதாரர்கள், நம்பூரணிப்பட்டி, கோவில்பட்டி, மாவடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கோவில் குடிமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story