மாநில தடகள போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நிதியுதவி
மாநில தடகள போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ரூ.20ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
தூத்துக்குடி
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலை திருவிழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் சாந்தி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் மாநில அளவிலான தடகளப் போட்டியில் மூன்றாமிடம் பிடித்த இப்பள்ளி மாணவியான ஓ.லட்சுமிநாராயணபுரம் முத்துராமன் மகள் ராதிகாவுக்கு எம்.எல்.ஏ. ரூ.20 ஆயிரம் வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன் ராஜ் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story