மாநில கூடைப்பந்து போட்டி; சென்னை, தூத்துக்குடி அணிகள் வெற்றி


மாநில கூடைப்பந்து போட்டி; சென்னை, தூத்துக்குடி அணிகள் வெற்றி
x

நெல்லையில் நடந்த மாநில கூடைப்பந்து போட்டியில் சென்னை, தூத்துக்குடி அணிகள் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

திருநெல்வேலி

நெல்லையில் நடந்த மாநில கூடைப்பந்து போட்டியில் சென்னை, தூத்துக்குடி அணிகள் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

மாநில கூடைப்பந்து போட்டி

நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி கடந்த 1-ந் தேதி தொடங்கியது.

இதில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, சேலம், ஈரோடு, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டன.

சென்னை அணி சாம்பியன்

இதன் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த ஏ.வி.எம்.ஆர். அணியும், வேலம்மாள் அணியும் மோதின. இதில் ஏ.வி.எம்.ஆர். அணி 61 புள்ளிகள் எடுத்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 48 புள்ளிகளை பெற்று சென்னை வேலம்மாள் அணி 2-வது இடத்தை பிடித்தது. முன்னதாக நடந்த போட்டியில் 3-வது இடத்தை தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் பள்ளி அணியும், 4-வது இடத்தை சேலம் செயின்ட் மேரீஸ் பள்ளி அணியும் பிடித்தன.

பெண்கள் பிரிவில் முதல் இடத்தை தூத்துக்குடி ஹோலிகிராஸ் பள்ளி அணியும், 2-வது இடத்தை சென்னை வித்யோதயா பள்ளி அணியும், 3-வது இடத்தை கோவை சி.சி.எம்.ஏ. அணியும், 4-வது இடத்தை கோவை கிருஷ்ணம்மாள் பள்ளி அணியும் பிடித்தன.

பரிசளிப்பு

தொடர்ந்து இரு பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.7 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பையும், 3-வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பிரைட் கூடைப்பந்து கழகம் மற்றும் ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கூடைப்பந்து கழகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.


Next Story