மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டி


மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
x

மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பாிசு வழங்கப்பட்டது.

ஈரோடு

தமிழ்நாடு சதுரங்க கழகம், ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் சார்பில் மாநில அளவிலான 9 வயதுக்கு உட்பட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, கொங்கு கல்வி நிலையத்தில் கடந்த 10-ந்தேதி முதல் நேற்று வரை நடந்தது. இந்த போட்டியில் ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, திண்டுக்கல், கோவை, நெல்லை, மதுரை, சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட தமிழகம் முழுவதும் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

நேற்று மாலை பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள். மேலும் மாநில அளவிலான செஸ் போட்டியில் மாணவர் பிரிவில் முதல் இடம் பிடித்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அக்ஷயா விக்னேஷ், 2-ம் இடம் பிடித்த சென்னையை சேர்ந்த ஸ்ரேயாஸ் மணி மற்றும் மாணவிகள் பிரிவில் முதல் இடம் பிடித்த சென்னையை சேர்ந்த பூஜா ஸ்ரீ, 2-ம் இடம் பிடித்த கன்னியாகுமரியை சேர்ந்த பெசிலிகா பியான்ஸ் ஆகியோர் அகில இந்திய அளவிலான செஸ் போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இதில் ரோட்டரி கிளப் ஈரோடு தலைவர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் செயலாளர் ரமேஷ் செய்திருந்தார்.


Related Tags :
Next Story