இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு


இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு

திருப்பூர்

திருப்பூர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு வருகிற ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி தொடங்கி 9-ந் தேதி வரை திருப்பூர் வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான மாநகர் மாவட்ட தயாரிப்பு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

2-ம் மண்டல செயலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார். சுப்பராயன் எம்.பி., மாநில நிர்வாக குழு உறுப்பினர் ரவி, மாநகர் மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள். மாநில மாநாட்டில் ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி பிரமாண்ட பேரணியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.


Next Story