மாநில கிரிக்கெட் போட்டி:ஈரோடு அணி 'சாம்பியன்'


மாநில கிரிக்கெட் போட்டி:ஈரோடு அணி சாம்பியன்
x

மாநில கிரிக்கெட் போட்டியில் ஈரோடு அணி ‘சாம்பியன்’ பட்டத்தை தட்டிச்சென்றது.

ஈரோடு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாநில கிரிக்கெட் போட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடந்தது. இதன் இறுதிப்போட்டி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சேசாயி காகித ஆலை மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஈரோடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்ட அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஈரோடு அணி 89.4 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் வீரர் ரிதம் குமார் 112 ரன்களை குவித்தார்.

தொடர்ந்து 224 ரன்கள் இலக்குடன் செங்கல்பட்டு அணி களத்தில் இறங்கியது. ஈரோடு வீரர்களின் பந்து வீச்சுக்கு பணிந்த அந்த அணி 83 ஓவர்களில் 205 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் ஈரோடு அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 'சாம்பியன்' பட்டத்தை தட்டி சென்றது. இதில் ஈரோடு அணி வீரர்கள் அஸ்வத் மிதூன், ரிதம் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வெற்றி பெற்ற வீரர்களையும், பயிற்சியாளர்களையும் ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சுரேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.


Related Tags :
Next Story