கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்


கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
x

தென்காசியில் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.

தென்காசி

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் செல்லையா, பொருளாளர் பட்டாபி ராமன் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். துணை தலைவர் ராமசாமி வரவேற்றார். செயலாளர் நவநீதகிருஷ்ணன் தீர்மானம் வாசித்தார். முடிவில் மாவட்ட தலைவர் கோயில்மணி நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து மாநில தலைவர் சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறுகையில், வாரந்தோறும் காணொலி காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடத்துவதை தவிர்த்து மாதம் ஒரு முறை நடத்த வேண்டும். சார்பதிவாளர் கலந்து கொள்வதற்கு விலக்கு அளிக்க வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் திரளாக கூட்டுறவு துறை ஊழியர்கள் பங்கேற்க வேண்டும். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு கூட்டுறவுத்துறை சார்பான அலுவலகங்கள் அமைக்க வேண்டும். புதிய பணியிடங்களை விரைவில் ஏற்படுத்த வேண்டும்' என்றார்.


Next Story