பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம்
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம்
நாகையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்லையா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், மாநில துணைச் செயலாளர் சீத்தாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவவேலன் வரவேற்றார். பின்னர் பொதுச்செயலாளர் கூறியதாவது:-
உயர்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை கற்றல், கற்பித்தல் பணி மேம்பட குறைந்தது 8 பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தொடக்க கல்வித்துறையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்வது. மழை காலத்தில் பழைய கட்டிடங்களை விரைவில் பழுதுநீக்கம் செய்ய வேண்டும். கோரிக்கைகளை அரசுக்கு நினைவூட்டுவதற்காகவும், கவனத்தை ஈர்ப்பதற்காகவும் வருகிற ஜனவரி மாதம் சென்னையில் 10 ஆயிரம் ஆசிரியர்களை திரட்டி உண்ணாவிரத போராட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.