சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் மாநில செயற்குழு கூட்டம்
நவசபரி அய்யப்பன் கோவிலில், சபரிமலைஅயப்ப சேவா சமாஜத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை அருகே சிப்காட் நவசபரி அய்யப்பன் கோவிலில், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு துரை சங்கர்ஜி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தினேஷ் வரவேற்புரை ஆற்றினார். வட தமிழக மாநில தலைவர் ஜெயசந்திரன் குருசாமி, மாநில பொதுச்செயலாளர் ஜெயராமன், மாநில செயலாளர் சுதாகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
கூட்டத்தில் மாநிலத்தில் 4 மண்டலங்களில் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடத்துவது, வேலூரில் வரும் டிசம்பர் மாதம் 4-ந் தேதி ஹரிவராசனம் நூற்றாண்டு விழா நடத்துவது, அனைத்து ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகரம், வட்டங்களில் சமாஜத்தின் கிளைகளை தொடங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் மாவட்ட செயலாளர் பழனி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story