மாநில பொதுக்குழு கூட்டம்
பஞ்சாலை தொழிலாளர் மாநில பொதுக்குழு கூட்டம் நடைெபற்றது.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் தமிழ் மாநில பஞ்சாலை தொழிலாளர் மாநில பொதுக்குழு கூட்டம் நடைெபற்றது. கூட்டத்திற்கு தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அசோகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சக்திவேல் வரவேற்றார். அரசு உத்தரவின்படி அனைத்து பஞ்சாலை தொழிலாளர்களுக்கும் ஆரம்பகால முதல் தினக்கூலியாக ரூ.493 வழங்க கோரியும், 25 ஆண்டு காலமாக பஞ்சாலை தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படாத நிலையில் உடனடியாக கூலி உயர்வு வழங்கவும், குடும்ப ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. பின்னா் இந்த கோரிக்கைகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முடிவில் மாநிலத் துணைத்தலைவர் கணேசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story