ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாநில அரசு விருது


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாநில அரசு விருது
x

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாநில அரசு விருதை கலெக்டர் வழங்கினார்.

திருப்பத்தூர்

காக்கணம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாநில அளவிலான சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு மாநில அரசு விருதை கல்வித்துறை செயலாளர் அறிவித்திருந்தார். விருதுக்கான கேடயத்தை சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை ஆசிரியர் கோ.ரவிச்சந்திரனிடம் வழங்கினார்கள். விருது பெற்றதை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் மற்றும் கிராம கல்விக் குழுவினர் பாராட்டினர்.


Next Story