மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நிறைவு: மதுரை போலீஸ் அணி சாம்பியன்


மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நிறைவு: மதுரை போலீஸ் அணி சாம்பியன்
x

கரூரில் 4 நாட்களாக நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நேற்று நிறைவு பெற்றது. இதில், மதுரை போலீஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

கரூர்

கூடைப்பந்து போட்டி நிறைவு

கரூர் திருவள்ளூவர் மைதானத்தில் கடந்த 20-ந்தேதி முதல் ேநற்று வரை கடந்த 4 நாட்களாக மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாக்-அவுட் முறையில் நடைபெற்றது. இதில், கரூர், மதுரை, சென்னை, திண்டுக்கல் திருச்சி, ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 24 அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நேற்று மாலையில் இறுதி போட்டி நடைபெற்றது.

மதுரை போலீஸ் அணி சாம்பியன்

இதில், முதல் பரிசுக்கான சாம்பியன் பட்டத்தை மதுரை தமிழ்நாடு போலீஸ் அணியும், 2-வது பரிசை ஈரோடு எல்.எம். ராமகிருஷ்ணன் அணியும், 3-வது பரிசை திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு எங்ஸ்டார் அணியும், 4-வது பரிசை கரூர் டெக்சிட்டி கூடைப்பந்து அணியும் பெற்றன. இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை கரூர் மாநகராட்சி மேயர் கவிதாகணேசன், துணை மேயர் தாரணிசரவணன் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.இதில், மண்டல குழு உறுப்பினர் கோல்ட் ஸ்பாட் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன் பாபு மற்றும் கூடைப்பந்து ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கரூர் டெக்சிட்டி கூடைப்பந்து கழக தலைவர் தனபதி, செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story