மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி - அமைச்சர் மூர்த்தி பரிசு வழங்கினார்


மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி  - அமைச்சர் மூர்த்தி பரிசு வழங்கினார்
x

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கலந்துகொண்டு அமைச்சர் மூர்த்தி பரிசு வழங்கினார்

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் அரசன்சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது. சோழவந்தான் தி.மு.க. சார்பில் நடந்த இந்த போட்டியில் மதுரை, கோவை, ஏற்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், வத்தலக்குண்டு, சோழவந்தான் உள்பட 18 அணிகள் கலந்து கொண்டன..12 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு பிரிவாகும், 14 வயது உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகும் போட்டிகள் 3 நாட்கள் நடந்தது.

நேற்று இரவு இறுதி போட்டிகள் நடைபெற்று இதற்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார்.பேரூராட்சி தலைவர்கள் சோழவந்தான் ஜெயராமன், வாடிப்பட்டி பால்பாண்டி, துணைத்தலைவர்கள் சோழவந்தான் லதாகண்ணன், வாடிப்பட்டி கார்த்திக், ஆனையூர் பகுதிசெயலாளர் மருதுபாண்டியன், பொதுக்குழுஉறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றியசெயலாளர் பசும்பொன்மாறன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச்செயலாளர் கவுன்சிலர் வக்கீல் சத்தியபிரகாஷ் வரவேற்றார்.இதில் கலந்து கொண்ட வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெற்றிபெற்ற அணிகளுக்கும் சிறந்த ஆட்டக்காரர்கள் மற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஆகியோருக்கு பல்வேறு சிறப்பு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கினார்.ஜே-ஜே கூடைப்பந்து போட்டி கிளப் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Next Story