மாநில அளவிலான வட்டு எறிதல் போட்டி:சென்னிமலை மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை


மாநில அளவிலான வட்டு எறிதல் போட்டி:சென்னிமலை மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை
x

மாநில அளவிலான வட்டு எறிதல் போட்டி:யில் சென்னிமலை மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தாா்

ஈரோடு

சென்னிமலை அருகே மைலாடி அழகு நகரை சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி நித்யா என்கிற மேனகா. இவர்களுடைய மகள் அனுஸ்ரீ (வயது 16). இவர் சென்னிமலை கொங்கு மெட்ரிக் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள மாணவி அனுஸ்ரீ முயற்சித்த போது, மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ளாததால், மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதி நிராகரிக்கப்படுகிறது என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சி.பிரபு, கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் என்கிற பி.சுப்பிரமணியம் ஆகியோர் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முயற்சியால் மாணவி அனுஸ்ரீ கடந்த 16-ந் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வட்டு எறிதல் போட்டியில் 38.7 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்ற மாணவி அனுஸ்ரீயை பலரும் பாராட்டி வருகின்றனர். மாணவி அனுஸ்ரீ ஏற்கனவே மாநில அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story