மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி


மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி
x

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது.

திருச்சி

திருச்சி உறையூர் போலீஸ் மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எப்.சி.உறையூர் சார்பில் 2-ம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி, நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து போட்டியில் கேரளா, பெங்களூரு, திருச்சி, தேனி, மதுரை, தஞ்சை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சென்னை, வால்பாறை, திருப்பூர், சேலம், சிவகங்கை, கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 36 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

இந்த போட்டியில் `ஏ' பிரிவில் 18 அணிகளும் மற்றும் `பி' பிரிவில் 18 அணிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த போட்டி, ஒரு அணிக்கு 5 வீரர் மட்டும் விளையாடும் கால்பந்தாட்ட விதிமுறைகளின்படி நடைபெறும் போட்டி ஆகும். பல்வேறு கட்டங்களாக நடைபெறும் இந்த போட்டியில் நாக்கவுட் முறை பின்பற்றப்படுகிறது. லீக் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் அரை இறுதி போட்டிகளிலும், அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டி விளையாடுகின்றன. இந்த போட்டியில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.30 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இன்று மாலை நடைபெறும் இறுதி போட்டியில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்.


Next Story