மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெற்றது
மதுரை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவில் பாரதியார் தின, குடியரசு தின ஜிம்னாஸ்டிக் போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதனை அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர். இந்த போட்டி வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது. ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் 14 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்குட்பட்டோர், 19 வயதிற்குட்பட்டோர் என 3 பிரிவுகளாக தனித்தனியே போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
Related Tags :
Next Story