மாநில அளவிலான கபடி போட்டி
மாநில அளவிலான கபடி போட்டி
சிவகங்கை
காரைக்குடி
காரைக்குடி கொப்புடையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காரைக்குடி மண்ணின் மைந்தர்கள் என்ற அமைப்பின் மூலம் மாநில அளவிலான கபடி போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்திலிருந்து பல மாவட்டங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இப் போட்டிகள் லீக் முறையில் 4 பிரிவுகளில் நடைபெற்றது. போட்டியில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரத்தை அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜராஜன் என்ஜினீயரிங் கல்லூரி அணி பெற்றது இரண்டாம் பரிசு ரூ.30 ஆயிரத்தை காரைக்குடி லலிதா பேக்ஸ் அணியும் பெற்றது. வெற்றி பெற்ற அணியின் வீரர்களை அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா பாராட்டினார்.
Related Tags :
Next Story