மாநில அளவிலான கபடி போட்டி
மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
திருச்சி
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காட்டூர் தென்னவர் கபடி குழு சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி 3 நாட்கள் நடைபெற்றது. முதல்நாள் போட்டியை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் முதலிடம் பெற்ற அணிக்கு ரூ.60 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.40 ஆயிரம், 3-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story