நத்தத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி


நத்தத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி
x

நத்தத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல்

நத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்ஷா தலைமை தாங்கி, போட்டியை தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் வெள்ளைச்சாமி, வக்கீல் பாலசுப்பிரமணியன், ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில், திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினர். பின்னர் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை போட்டி ஒருங்கிணைப்பாளரும், கராத்தே மாஸ்டருமான சங்கர் செய்திருந்தார்.


Next Story