மாநில அளவிலான இலக்கியப் போட்டி:திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை
மாநில அளவிலான இலக்கியப் போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருச்செந்தூர்:
மதுரை யாதவா கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் "ஹயாசின்த் 2023" என்ற பெயரில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடைேயயான இலக்கியப் போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் 12 கல்லூரிகள் பங்கேற்றன. இதில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி ஆங்கிலத்துறை மாணவர்கள் 15 பேர் கலந்து கொண்டதில் நாடகம், சிலை நாடகம், இலக்கிய அணிவகுப்பு, "உங்கள் விருப்பம்" ஆகிய போட்டிகளில் முதல் பரிசும், இலக்கிய வினாடி வினாவில் 3-ம் பரிசும் பெற்றனர். மேலும், ஆதித்தனார் கல்லூரி முதலிடத்தை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையும் வென்றது. கடந்த ஆண்டும் இதேபோல் ஆதித்தனார் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது குறிபிடத்தக்கது. இப்போட்டியில் முதுகலை மாணவர்கள் ஆலன் சாமுவேல், ஹெர்சம், பெரியமருதுதிலிப்குமார், ப்ரோசேகர், ரகுபதி ஆனந்தா, ஆண்ட்ரூஸ், குகன், சிவகணேஷ், ஸ்டாலின் சந்தோஷ், சுதாகரன் மற்றும் இளங்கலை மாணவர்கள் அஜித் செல்வன், போஸ், சந்தோஷ் ஜோசப், மதன்குமார், சாம் ஜெரால்ட் வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆங்கிலத்துறை பேராசிரியை கவிதா மாணவர்களை ஊக்குவித்து இலக்கியப் போட்டிகளுக்கு அழைத்து சென்றார்.
இந்த சாதனை நிகழ்த்திய மாணவர்களை கல்லுாரி முதல்வர் து.சி.மகேந்திரன், செயலாளர் ஜெயக்குமார், ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி ஆகியோர் பாராட்டினர். ஆங்கிலத்துறை பேராசிரியர்கள், பிற துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.