மாநில அளவிலான துடுப்பு நீச்சல் போட்டிகள்


மாநில அளவிலான துடுப்பு நீச்சல் போட்டிகள்
x
தினத்தந்தி 2 July 2023 12:15 AM IST (Updated: 2 July 2023 4:56 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் மாநில அளவிலான துடுப்பு நீச்சல் போட்டிகள் நடந்தது.

தேனி

தேனி,

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், தமிழ்நாடு மாநில நீருக்கடி (அண்டர் வாட்டர்) விளையாட்டு சங்கம் சார்பில், மாநில அளவிலான துடுப்பு நீச்சல் போட்டிகள் நேற்று நடந்தது. இதில் தேனி, திண்டுக்கல், சென்னை, திருச்சி உள்பட 20 மாவட்டங்களை சேர்ந்த 155 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கால்களில் துடுப்பு அணிந்து கொண்டு நீருக்கு அடியில் 5 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. போட்டிகளை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தொடங்கி வைத்து பேசினார்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார். நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் நீதிராஜன் வரவேற்றார். துணைத் தலைவர் ஹரிசங்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு இளமாறன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். துணைத்தலைவர் செந்தில்நாராயணன், தேனி மாவட்ட பாரா ஒலிம்பிக் நீச்சல் சங்க தலைவர் பிரேம்சாய் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.


Next Story