மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி


மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி
x
தினத்தந்தி 5 Feb 2023 12:30 AM IST (Updated: 5 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி நடந்தது.

திண்டுக்கல்

தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கம் சார்பில், திண்டுக்கல் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், 34 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கணைகள் பங்கேற்று விளையாடுகின்றனர். போட்டிகள் வயது அடிப்படையில் 10, 11 மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 3 பிரிவுகளாகவும், நாக்-அவுட் சுற்று அடிப்படையிலும் நடக்கிறது. இதையொட்டி நேற்று நடந்த தொடக்க நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கத்தின் இணை செயலாளர் ஜோதிபாசு முன்னிலை வகித்தார்.

இதில் பங்கேற்ற வீரர்-வீராங்கனைகள் ஆக்ரோஷமாக மோதியது அனைவரையும் கவர்ந்தது. இதனை கண்காணிப்பதற்காக 8 சர்வதேச நடுவர்கள் உள்பட 60 நடுவர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் இறுதிப்போட்டிகள் நாளை நடக்கிறது. இதில் அமைச்சர் இ.பெரியசாமி, தேக்வாண்டோ சங்கத்தின் மாநில தலைவர் ஐசரிகணேஷ் ஆகியோர் பங்கேற்று வீரர்களுக்கு பரிசு வழங்குகின்றனர். மேலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர்-வீராங்கனைகள் புதுச்சேரி, குஜராத், தெலுங்கானாவில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் தேக்வாண்டோ சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.



Next Story