மாநில அளவிலான முதியோர் ஆலோசனை குழுவில் சேர விண்ணப்பிக்கலாம்


மாநில அளவிலான   முதியோர் ஆலோசனை குழுவில் சேர விண்ணப்பிக்கலாம்
x

மாநில அளவிலான முதியோர் ஆலோசனை குழுவில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

மாநில அளவிலான முதியோர் ஆலோசானை குழுவில் அலுவல்சாரா உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்த குழுவில் சேருவதற்கு முதியோர் நலமேம்பாட்டு பணிகளில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவமும், முழு ஈடுபாடும் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி, தொலைபேசி எண்: 0461-2325606 என்ற முகவரியில் நேரில் அணுகி விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் தாங்கள் பதிவு செய்யும் பொருட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்ட சமூகநல அலுவலரை அணுகி தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story