வேளாண்மை வளர்ச்சித் திட்ட பணிகளை மாநில கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


வேளாண்மை வளர்ச்சித் திட்ட பணிகளை மாநில கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x

பேரணாம்பட்டு ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்ட பணிகளை மாநில கண்காணிப்பு அலுவலர் சாந்தி சுந்தர்ராமன் ஆய்வு செய்து, பயனாளிகளின் தேவைகளை கேட்டறிந்தார்.

வேலூர்

பேரணாம்பட்டு ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்ட பணிகளை மாநில கண்காணிப்பு அலுவலர் சாந்தி சுந்தர்ராமன் ஆய்வு செய்து, பயனாளிகளின் தேவைகளை கேட்டறிந்தார்.

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

பேரணாம்பட்டு ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயிரிடப்படாத தரிசு நிலங்களில் சாகுபடி கொண்டு வரும் திட்டத்தில் மொரசப்பல்லி, சாத்கர் ஆகிய கிராமங்களில் மொத்தம் 23 பேர் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தரிசு நிலங்களில் தலா ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, வேளாண்மை, தோட்டக்கலைத் துறை சார்பில் வேளாண் கருவிகள், உளுந்து, துவரை, பச்சை பயறு, காராமணி, மணிலா ஆகிய விதைகள், தார் பாலின்கள், கை தெளிப்பான் வழங்கப்பட்டுள்ளன. மா செடிகள் வழங்கப்பட உள்ளன.

2022-ம் ஆண்டில் எருக்கம்பட்டு, கோட்டையூர் ஆகிய கிராமங்களில் 24 பேர் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சாகுபடி கொண்டு வரும் விதைகள் வழங்கவும், ஆழ் துளை கிணறுகள் அமைக்கப்படவும் உள்ளது. இந்த பணிகளை கலைஞரின் வேளாண்மை வளர்ச்சித் திட்ட மாநில கண்காணிப்பு அலுவலர் சாந்தி சுந்தர்ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் எருக்கம்பட்டு, கோட்டையூர் கிராமங்களில் தரிசு நிலதொகுப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளிகளுடன் கலந்துரையாடல் நடத்தி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.

கேட்டறிந்தார்

இதனைத் தொடர்ந்து பேரணாம்பட்டு வேளாண்மை அலுவலகத்தில் கலைஞரின் வேளாண்மை வளர்ச்சி திட்ட பொறுப்பு அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன், மாவட்ட தலைமை பொறியாளர் ஸ்ரீதர், துணை இயக்குனர் ஸ்டீபன், பேரணாம்பட்டு வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா, தோட்டக்கலை அலுவலர் சுபாஷ் சந்திர போஸ், வேளாண்மை அலுவலர் சத்திய லட்சுமி, உதவி அலுவலர் செல்வன், வேளாண்மை, தோட்டக்கலைதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story