மாநில வலுதூக்கும் போட்டி; ஞானதிரவியம் எம்.பி. தொடங்கி வைத்தார்


மாநில வலுதூக்கும் போட்டி; ஞானதிரவியம் எம்.பி. தொடங்கி வைத்தார்
x

பாளையங்கோட்டையில் மாநில வலுதூக்கும் போட்டி நடந்தது. இதனை ஞானதிரவியம் எம்.பி. தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி நேற்று தொடங்கியது. மாவட்ட வலுதூக்கும் சங்க செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார். மாவட்ட வலுதூக்கும் சங்க தலைவர் வி.பி.துரை முன்னிலை வகித்தார்.

ஞானதிரவியம் எம்.பி. குத்துவிளக்கு ஏற்றி, போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் மாநிலம் முழுவதும் இருந்து 400-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அவர்களுக்கு 9 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.

சர்வதேச வீரர் உதயகுமார், சங்க மாவட்ட பொருளாளர் தளவாய்முத்து, துணைத்தலைவர் முத்துபாண்டியன், தபால் இலாகா நெல்லை கோட்ட முதுநிலை அதிகாரி சிவாஜி கணேஷ், பொறுப்பாளர் சண்முகசுந்தரம், ஆணழகன் சங்க செயலாளர் கல்லத்தியான், துணைத்தலைவர் சரவணகுமார், தென் தமிழ்நாடு வலுதூக்கும் சங்க ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வலுதூக்கும் சங்க மாநில துணைத்தலைவர் சிவராமலிங்க ரவி நன்றி கூறினார்.

தொடர்ந்து இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) போட்டிகள் நடைபெறுகிறது.


Next Story