மாநில கைப்பந்து போட்டி


மாநில கைப்பந்து போட்டி
x
தினத்தந்தி 30 May 2023 12:30 AM IST (Updated: 30 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே மாநில கைப்பந்து போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் லியா கைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 40-க்கும் மேற்பட்ட ஆண்கள் அணிகளும், 20-க்கும் மகளிர் அணிகளும் கலந்து கொண்டனர்.

ஆண்கள் பிரிவு போட்டியில் கன்னியாகுமரி கே.கே.பிரண்ட்ஸ் அணி முதலிடமும், கீழக்கரை சி.வி.சி. அணி 2-வது இடமும் பிடித்தது. புதியம்புத்தூர் அணி 3-வது இடத்தையும், கோவில்பட்டி அணி 4-வது இடத்தையும் பிடித்தது.

அதேபோல் பெண்கள் பிரிவில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி முதலிடத்தையும், நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அணி 2-ம் இடத்தையும், சென்னை லிட்டில் ஸ்போர்ட்ஸ் அணியினர் 3-ம் இடத்தையும், மதுரை எல்.டி.சி அணியினர் 4-ம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.


Next Story