திருவாரூரில், மாநில மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
திருவாரூரில், மாநில மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
திருவாரூரில் மாநில மகளிர் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 24 மாவட்டங்களை சேர்ந்த 121 விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 8 புள்ளிகள் பெற்ற சென்னை மாவட்டத்தை சேர்ந்த சரண்யா வெற்றி பெற்று மாநில சாம்பியன் பட்டத்தை பெற்றார். இவர் 7-வது முறையாக மாநில சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை சேர்ந்த ஜனனி 2-வது பரிசு பெற்றார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரெபக்கா ஜெசு மரியான் 3-ம் இடத்தையும், சென்னை மாவட்டத்தை சேர்ந்த வீசி நிவேதா4-ம் இடத்தையும் பிடித்தனா. வெற்றி பெற்ற 4 பேரும் வருகிற ஜூன் மாதம் குஜராத் மாநிலத்தின் நடைபெற உள்ள தேசிய சதுரங்க போட்டிக்கு தமிழ்நாட்டின் சார்பில் செல்ல உள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு திருவாரூர் டாக்டர் செந்தில் பிரகாசம் தலைமை தாங்்கினார். திருவாரூர் கனகராஜன், ஆடிட்டர் பாலாஜி வெங்கட்ராமன், தமிழ்நாடு சதுரங்க கழக இணைச் செயலாளர் பாலகுணசேகரன், மருத்துவர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனியார் வங்கி நிர்வாகி ஸ்ரீதரன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முடிவில் திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் இணை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.