மாநில யோகா போட்டி: ஆத்தூர் சண்முகசுந்தரம் நாடார் மேல்நிலைப்பள்ளி முதலிடம்


மாநில யோகா போட்டி: ஆத்தூர் சண்முகசுந்தரம் நாடார் மேல்நிலைப்பள்ளி முதலிடம்
x
தினத்தந்தி 4 Sept 2023 12:15 AM IST (Updated: 4 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாநில யோகா போட்டியில் ஆத்தூர் சண்முகசுந்தரம் நாடார் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் ஏகாத்மா யோக விஷ்வ வித்யாலயா அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான ஆறாவது ஆண்டு யோகா போட்டி நடைபெற்றது.

போட்டி அசோசியேஷனை சேர்ந்த ஆர். சங்கரி, சிவகாசி சாந்தி, ஏரியூர் சண்முகப்பிரியா, மன்னார்குடி சூரிய பிரபா, ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இப்போட்டியில் 15 மாவட்டங்களில் இருந்து 80 பள்ளியை சேர்ந்த 1,080 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

போட்டியில் முதலிடத்தை ஆத்தூர் சண்முகசுந்தரம்

நாடார் மேல்நிலைப்பள்ளி பள்ளியும,் இரண்டாம் இடத்தினை ஆத்தூர் சண்முகசுந்தரம் நாடார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியும், மூன்றாம் இடத்தை பணிக்க நாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப் பள்ளியும் பிடித்தன. மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் கமால்தீன் தலைமை தாங்கினார்.

சாகுபுரம் டி.சி. டபிள்யூ தொழிற்சாலையின் உதவி தலைவர் எஸ். சுரேஷ் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

சிவகாசி எஸ்.ஷாஜகான் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், ஆத்தூர் சுற்று வட்டார நாடார் உறவின்முறை சங்க தலைவர் கே செல்வராஜ், ஆத்தூர் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் எம். பி. முருகானந்தம், உட்பட பலர் கலந்து கொண்டனர். யோகா அமைப்பின் நிர்வாகி ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story