பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கல் விழா


பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கல் விழா
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கல் விழா

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மணிவிழா நிறைவு மற்றும் பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாகை தெற்கு மாவட்ட செயலாளர் சுமாசெல்வராசு தலைமை தாங்கினார். திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு வேதாரண்யம் காந்திநகர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள், இனிப்புகள் வழங்கபட்டன. பின்னர் அறுசுவை உணவும் வழங்கபட்டது. விழாவில் மாநில, மாவட்ட, நகர, பேரூராட்சி, மாநகராட்சி ஒன்றிய முகாம் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், திருமாசரவணன், குணசேகரன், தனிக்கொடி, ரமேஷ், லட்சுமணன், முரளி, கமலஹாசன், தர்மராஜ், மோகன், காளிதாஸ், கிருஷ்ணமூர்த்தி, சுகுமார், சேகர், குபேந்திரன், காளிதாஸ், ஜெயராமன் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.


Next Story