தேசிய கொடியுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் விநாயகர் சிலை
தேசிய கொடியுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் விநாயகர் சிலை விற்பனைக்கு வந்துள்ளது.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகரில், திருப்பத்தூர்- நாட்டறம்பள்ளி சாலையில் கட்டேரி அம்மன் கோவில் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராக வந்துள்ளது. ஒரு அடி முதல் 15 அடி வரை விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு விநாயகர் தேசிய கொடியுடன் மோட்டார் சைக்கிளில் செல்வதுபோன்று வித்தியாசமான வடிவில் விநாயகர் சிலை விற்பனைக்கு வைத்துள்ளனர். இதனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். மேலும் இளைஞர்களும் பொதுமக்களும் தேசிய கொடியுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் விநாயகர் சிலை அருகே செல்பி எடுத்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story