எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் கூட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் கூட்டம்
x

தென்காசியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

தென்காசி

தென்காசி:

தென்காசியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர தலைவர் சீனா சேனா சர்தார் தலைமை தாங்கினார். செயலாளர் ஷேக் சிந்தா மதார் வரவேற்றார். நகர துணை செயலாளர் பீர்முகமது, பொருளாளர் சுல்தான், செயற்குழு உறுப்பினர்கள் சலீம், பாதுஷா, மசூது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறையை போக்குவதற்கு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் தென்காசி புதிய பஸ்நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகர துணைத்தலைவர் காஜா நன்றி கூறினார்.


Next Story